கில், பும்ரா இல்லை... ரோகித்துக்கு பின் அவர்தான் டெஸ்ட் கேப்டனாக தகுதியானவர் - பாக்.முன்னாள் வீரர்

ரோகித் சர்மா டி20 உலகக்கோப்பையுடன் சர்வதேச 20 ஓவர் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.

Update: 2024-09-26 07:22 GMT

கராச்சி,

இந்திய கிரிக்கெட்டின் 3 வடிவிலான அணிகளுக்கும் ரோகித் சர்மா தலைமை தாங்கினார். ஆனால் டி20 உலகக்கோப்பை வெற்றியுடன் அவர் ஏற்கனவே 20 ஓவர் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். அவரைத் தொடர்ந்து பிசிசிஐ சூர்யகுமார் யாதவை புதிய டி20 கேப்டனாக நியமித்துள்ளது.

மேலும் 3 வடிவிலான போட்டிகளுக்கும் சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவர் சமீப காலங்களில் 3 வகையான கிரிக்கெட்டிலும் பேட்டிங்கில் ஓரளவு நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார். அதனால் அவரை ஆல் பார்மட் வீரராக பார்ப்பதாக தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் சமீபத்தில் கூறினார். எனவே அவரை இந்தியாவின் வருங்கால கேப்டனாக வளர்ப்பதற்காகவே தற்போது துணை கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ளதாக அஜித் அகர்கர் கூறியிருந்தார்.

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவுக்கு பின் ரிஷப் பண்ட் இந்தியாவின் கேப்டனாக தகுதியானவர் என முன்னாள் பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-"ரிஷப் பண்ட் கேப்டனாக சிறந்த தேர்வு என்று நான் நம்புகிறேன். முதலில் அவர் விவேகமான விக்கெட் கீப்பர். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் அற்புதமான வீரர். டெஸ்ட் போட்டிகளில் அவர் இயற்கையாக அதிரடியாக விளையாடும் விதமும் பவுலர்களுடன் தொடர்பு கொள்ளும் விதமும் நன்றாக இருக்கிறது. எனவே அவர் இந்திய அணியின் சிறந்த கேப்டனாக இருப்பார் என்று நினைக்கிறேன்" என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்