பந்து வீச கூடுதல் நேரம்: சென்னை அணி கேப்டன் டோனிக்கு சிக்கல்

தாமதமாக பந்து வீசும் நிலை நீடித்தால் கேப்டன் அபராதம் மற்றும் தடை நடவடிக்கைக்குள்ளாக நேரிடும்.

Update: 2023-04-04 21:40 GMT

சென்னை,

சேப்பாக்கம் மைதானத்தில் 4 ஆண்டுக்கு பிறகு ஐ.பி.எல். போட்டியில் கால்பதித்த டோனி 2 சிக்சருடன் 12 ரன்கள் எடுத்து ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார்.

அதேநேரத்தில், முதல் இரு ஆட்டத்திலும் வைடு, நோ-பால் மூலம் பந்து வீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் என்ற முறையில் டோனிக்கு சிக்கலை உருவாக்கியுள்ளது. தாமதமாக பந்து வீசும் நிலை நீடித்தால் கேப்டன் அபராதம் மற்றும் தடை நடவடிக்கைக்குள்ளாக நேரிடும்.

அதாவது ஒரு சீசனில் ஒரு அணி 3 முறை மெதுவாக பந்துவீசும் புகாரில் சிக்கினால் கேப்டனுக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும். இதைத் தான் டோனி சொல்லி பந்து வீச்சாளர்களை கண்டித்து இருக்கிறார். போதிய அனுபவம் இல்லாத வேகப்பந்து வீச்சாளர்கள் துஷர் தேஷ்பாண்டே 5 வைடு, 4 நோ-பாலும், ராஜ்வர்தன் ஹேங்கர்கேகர் 6 வைடு, ஒரு நோ-பாலும் வீசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை அணி தனது 3-வது லீக்கில் வருகிற 8-ந்தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மும்பை இந்தியன்சை எதிர்கொள்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்