எமர்ஜிங் ஆசிய கோப்பை; திலக் வர்மா தலைமையில் களம் இறங்கும் இந்தியா

இந்த அணிக்கு திலக் வர்மா கேப்டனாகவும், அபிஷேக் சர்மா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2024-10-14 09:26 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கோப்பை 2024 (எமர்ஜிங் ஆசிய கோப்பை) கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 18-ம் தேதி துவங்குகிறது. கடந்த முறை இலங்கையில் நடைபெற்ற அந்தத் தொடர் இம்முறை ஓமன் நாட்டில் நடைபெற உள்ளது. அந்தத் தொடரில் இந்தியா ஏ அணி குரூப் - பி பிரிவில் இடம் பிடித்துள்ளது. அந்தப் பிரிவில் பாகிஸ்தான், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளும் இடம் பிடித்துள்ளது.

குரூப் ஏ பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், நேபாளம் அணிகளும் இடம் பிடித்துள்ளன. இந்த தொடரில் முதலாவதாக நடைபெறும் லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன் ஒருமுறை மோதும். அதன் முடிவில் புள்ளிப்பட்டியலில் டாப் 2 இடங்களை பிடிக்கும் 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இந்நிலையில், இந்த தொடருக்கான இந்தியா ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு திலக் வர்மா கேப்டனாகவும், அபிஷேக் சர்மா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த அணியில் சாய் கிஷோர், ஆயுஷ் பதோனி, ராகுல் சஹார் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்தியா ஏ அணி விவரம்; திலக் வர்மா (கேப்டன்), அபிஷேக் சர்மா (துணை கேப்டன்), ப்ரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), நிஷாந்த் சிந்து, ராமன் தீப் சிங், நேஹால் வதேரா, ஆயுஷ் பதோனி, அனுஜ் ராவத் (விக்கெட் கீப்பர்), சாய் கிஷோர், ஹ்ரிதிக் ஷோகீன், ராகுல் சஹார், வைபவ் அரோரா, அன்ஷுல் கம்போஜ், அகிப் கான், ரசிக் சலாம்.


Tags:    

மேலும் செய்திகள்