காலில் அறுவை சிகிச்சை செய்ய லண்டன் செல்கிறார் தோனி...? - வெளியான தகவல்

காலில் அறுவை சிகிச்சை செய்ய தோனி லண்டன் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2024-05-21 11:31 GMT

Image Courtesy: @ChennaiIPL

சென்னை,

நடப்பு ஐ.பி.எல் தொடரில் சென்னை அணி தனது கடைசி லீக் போட்டியை கடந்த 18-ம் தேதி விளையாடியது. பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் சென்னை அணி பெங்களூரு அணியிடம் 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால் பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்தது.

பெங்களூரு அணியினர் தோனிக்கு கை குலுக்காமல் சென்றது சமூக வலைதளங்களில் சர்சையை கிளப்பியது. இந்நிலையில் இந்தப் போட்டிதான் தோனியின் கடைசி ஐ.பி.எல் என்ற கருத்து பரவி வருகிறது.

இந்த நிலையில் தோனி தனது எதிர்காலம் குறித்து எங்களிடம் எதுவும் பேசவில்லை என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரி ஒருவர்  தெரிவித்தார். அவர் முடிவு எடுக்க நாங்கள் நேரம் கொடுப்போம் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், தோனி கால் தசை நார் வலிக்கு அறுவை சிகிச்சை செய்ய லண்டன் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சிகிச்சையில் இருந்து குணமாக 5- 6 மாதங்கள் ஆகும் எனவும் அதன்பின்னர் தோனி தனது எதிர்கால திட்டங்கள் குறித்து யோசிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்