தவான்-பிரப்சிம்ரன் சிங் அதிரடி: பஞ்சாப் 197 ரன்கள் குவிப்பு...!

ஐபிஎல் தொடரின் இன்றையை லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஆடி வருகின்றன.

Update: 2023-04-05 16:00 GMT

Image Courtesy: @IPL

கவுகாத்தி,

ஐபிஎல் தொடரின் 16வது சீசன் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த முறை உள்ளூர், வெளியூர் அடிப்படையில் ஆட்டங்கள் நடைபெறுவதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த முறை ஐபிஎல் தொடரில் பல்வேறு புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்துக்கான டாஸில் ஜெயித்த ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரரகளாக கேப்டன் ஷிகர் தவான் மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் களம் இறங்கினர்.

இதில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரப்சிம்ரன் சிங் அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 34 பந்தில் 60 ரன் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். பிரப்சிம்ரன் - ஷிகர் இணை முதல் விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து பானுகா ராஜபக்சே களம் இறங்கினார். அவர் 1 பந்தில் 1 ரன் எடுத்திருந்த நிலையில் ஷிகர் தவான் அடித்த பந்து அவரது கையில் பலமாக தாக்கியது. இதன் காரணமாக அவர் வெளியேறினார்.

இதையடுத்து ஜித்தேஷ் சர்மா தவானுடன் ஜோடி சேர்ந்தார். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தவான் 36 பந்தில் அரைசதம் அடித்தார். மறுமுனையில் அதிரடியாக ஆடிய ஜித்தேஷ் சர்மா 27 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அடுத்து வந்த சிக்கந்தர் ராஸா 1 ரன் எடுத்த நிலையில் அஷ்வின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து அதிரடி ஆட்டக்காரர் ஷாருக்கான் களம் இறங்கினார்.

இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் குவித்தது. பஞ்சாப் தரப்பில் தவான் 86 ரன்னும், பிரப்சிம்ரன் சிங் 60 ரன்னும் எடுத்தனர். இதையடுத்து 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆட உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்