வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிராக வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது மகிழ்ச்சி - எய்டன் மார்க்ரம்

9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.

Update: 2024-06-24 11:54 GMT

Image Courtesy: AFP

ஆண்டிகுவா,

9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் இன்று தென் ஆப்பிரிக்காவுடன் மோதியது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ஷம்சி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. தென் ஆப்பிரிக்கா பேட்டிங் செய்த சமயத்தில் திடீரென மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மழை நின்றதையடுத்து தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற 17 ஓவர்களில் 123 ரன்கள் அடிக்க வேண்டும் என்று இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது.

இந்த இலக்கை தென் ஆப்பிரிக்கா அணி 16.1 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அரையிறுதிக்கு முன்னேறியது. இதையடுத்து இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின் தென் ஆப்பிரிக்க கேப்டன் எய்டன் மார்க்ரம் அளித்த பேட்டியில் கூறியதாவது,

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற்று அரையிறுதிக்குள் வருவது பெரிய நிம்மதி. நாங்கள் உறுதியாக இருக்க விரும்பினோம். மழை வந்ததற்கு பிறகு விக்கெட் நன்றாக மாறியது. நாங்கள் ஆட்டத்தை சீக்கிரத்தில் முடிக்க முயற்சி செய்தோம். இதனால் நாங்கள் ஒரு டிரிக்கியான சூழ்நிலையில் சிக்கிக் கொண்டோம். ஆனால் இலக்கை அடைந்ததில் மகிழ்ச்சி.

நாங்கள் நிலைமைகளை மதிப்பிட்டு, சிறப்பாக பந்துவீசி அவர்களை சரியான ஸ்கோரில் வைத்தோம். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒரு கணிக்க முடியாத சுழல் பந்துவீச்சாளர் ஷம்சியை கொண்டு வர விரும்பினோம். பந்து நன்றாக திரும்பியது. எனவே நாங்கள் சுழல் பந்துவீச்சை அதிகம் வீசினோம். ஒருவேளை வேகப்பந்து வீச்சுக்கு சாதகம் இருந்திருந்தால் ரபாடா இன்று இரண்டு ஓவர் வீசியதற்கு பதிலாக முழு ஓவரையும் வீசி இருப்பார்.

நாங்கள் தற்போதைய நிலையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். எங்களுடைய பவுலிங் யூனிட் நன்றாக செயல்படுகிறது. ஒரு பேட்டிங் யூனிட்டாக ஆட்டத்தை எப்போது எடுப்பது என்பது குறித்து நாங்கள் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும். நான் இன்று இதைச் சரியாக செய்யவில்லை. நாம் யாராக இருந்தாலும் சிறந்த முறையில் செயல்பட தொடங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்