ஜடேஜா, அஸ்வினை சமாளிக்குறது தான் பெரிய சவாலாக இருந்தது - ரோகித் சர்மா

இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Update: 2023-02-12 09:41 GMT

Image Courtesy : AFP 

நாக்பூர்,

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் கடந்த 9ம் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 177 ரன்களும், இந்தியா 400 ரன்களும் குவித்தது. இதையடுத்து 223 ரன்கள் பின் தங்கிய நிலையில் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 91 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து, அஸ்வின் 8 விக்கெட்டுகளையும், ஜடேஜா 7 விக்கெட்டுகளையும் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர்.

அவர்களின் செயல்பாடு தொடர்பாக போட்டி முடிந்த பிறகு பதிலளித்த கேப்டன் ரோகித் சர்மா கூறியதவாது ,அணியில் திறமையான 3 சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பதும், அவர்கள் சிறப்பாக செயல்படுவதும் மகிழ்ச்சி அளிக்கிறது.

ஜடேஜா 249 விக்கெட்டுகளில் இருப்பதால் பந்தை என்னிடம் கொடு என்று கூறினார் .அஸ்வின் போட்டியில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி இருப்பதால் பந்தை எனக்கு கொடுக்க வேண்டும் என்று கூறினார். இவர்கள் 2 பேரையும் சமாளிக்கிறது தான் பெரிய சவாலாக இருந்தது என சிரிப்புடன் கூறினார் .

சாதனைகள் குறித்து எனக்கு அதிகம் தெரியாது . அனால் இருவரும் அவர்களது சாதனைகளை குறித்து தெரிந்து வைத்துள்ளனர்.என்றார் 

Tags:    

மேலும் செய்திகள்