ஐபிஎல் கிரிக்கெட்: டெல்லி அணியின் புதிய கேப்டன் யார்? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரிஷப் பண்ட் கார் விபத்தில் படுகாயமடைந்தார்.
டெல்லி,
16வது ஐபிஎல் தொடர் வரும் 31-ம் தேதி தொடங்க உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் தொடருக்காக பல்வேறு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர்.
இதனிடையே, கடந்த ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரிஷப் பண்ட் கார் விபத்தில் படுகாயமடைந்து தற்போது குணமடைந்து வருகிறார். அவர் நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேட்பனாக டேவிட் வார்னர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், துணை கேப்டனாக அக்சர் பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், டெல்லி அணியின் இயக்குனராக இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலி செயல்படுவார் என்று டெல்லி அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.