தொடர்ந்து சிலிண்டர் சப்ளை செய்யும் தந்தை - ரிங்கு சிங் ஓபன் டாக்

ரிங்க்கு சிங்கின் தந்தை கான்சந்திர சிங் இன்னும் கியாஸ் சிலிண்டர் சப்ளை தொழிலை செய்து கொண்டிருக்கிறார்.

Update: 2024-01-30 01:36 GMT

லக்னோ,

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக உருவெடுத்துள்ள ரிங்கு சிங், உத்தரபிரதேச மாநிலம் அலிகாரைச் சேர்ந்தவர். இந்திய அணிக்காக இதுவரை 2 ஒரு நாள் மற்றும் 15 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி உள்ளார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடும் அவர் ஐ.பி.எல்.-ல் ரூ.55 லட்சத்தை ஊதியமாக பெறுகிறார்.

குறுகிய காலத்தில் இந்திய அணியில் நுழைந்து விட்ட அவர் அதிக பணம் சம்பாதிக்க தொடங்கி விட்டார். இதன் மூலம் ஏழ்மையில் இருந்த அவரது குடும்பம் இப்போது ஓரளவு வசதியான நிலைக்கு வந்து விட்டது.

ஆனாலும், ஆச்சரியம் அளிக்கும் வகையில் அவரது தந்தை கான்சந்திர சிங் இன்னும் கியாஸ் சிலிண்டர் சப்ளை தொழிலை செய்து கொண்டிருக்கிறார். குட்டி லாரியில் சிண்டர்களை ஏற்றிக் கொண்டு வீடு, கடைகளுக்கு அதை சப்ளை செய்யும் வீடியோ காட்சி தற்போது வைரலாகியுள்ளது. இது குறித்து ரிங்கு சிங் கூறியதாவது,

நான் எனது தந்தையிடம் சிலிண்டர் சப்ளை வேலையை விட்டு விட்டு ஓய்வு எடுக்கும்படி அடிக்கடி கூறி வருகிறேன். ஆனால் அவர் வேலையை விட மறுக்கிறார். அவர் அந்த வேலையை இன்னும் விரும்பி செய்து கொண்டிருக்கிறார். சிலருக்கு எப்போதும் வேலை செய்து கொண்டிருப்பது பிடிக்கும். அத்தகைய நபர்களிடம் வேலையை விடச் சொல்வது கடினம். எனது தந்தையும் அந்த ரகம் தான். இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்