கரீபியன் பிரீமியர் லீக்: கயானாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற லூசியா கிங்ஸ்

கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் செயிண்ட் லூசியா கிங்ஸ் - கயானா அமேசான் வாரியர்ஸ் அணிகள் மோதின.

Update: 2024-10-07 09:28 GMT

Image Courtesy; @SaintLuciaKings / @CPL

கயானா,

6 அணிகள் கலந்து கொண்டுள்ள கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் டு பிளெஸ்சிஸ் தலைமையிலான செயிண்ட் லூசியா கிங்ஸ் அணியும், இம்ரான் தாஹிர் தலைமையிலான கயானா அமேசான் வாரியர்ஸ் அணியும் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கயானா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. கயானா தரப்பில் அதிகபட்சமாக பிரிட்டோரியஸ் 25 ரன்கள் எடுத்தார். லூசியா கிங்ஸ் தரப்பில் நூர் அகமது 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து 139 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய செயிண்ட் லூசியா கிங்ஸ் 18.1 ஓவரில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 139 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. செயிண்ட் லூசியா கிங்ஸ் தரப்பில் ஆரோன் ஜான்ஸ் 48 ரன்கள் எடுத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்