பென் டக்கெட் அதிரடி சதம்.. ஆஸ்திரேலிய அணிக்கு வலுவான இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து

இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக பென் டக்கெட் 107 ரன்கள் குவித்தார்.

Update: 2024-09-29 13:47 GMT

பிரிஸ்டல்,

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் மற்றும் பிலிப் சால்ட் இணை அதிரடியாக விளையாடி நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர். அதிரடியாக விளையாடிய சால்ட் 27 பந்துகளில் 45 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய வில் ஜாக்ஸ் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

பின்னர் கை கோர்த்த பென் டக்கெட் - ஹாரி புரூக் மிடில் ஓவர்களில் அதிரடியாக விளையாடி அணிக்கு வலு சேர்த்தனர். பென் டக்கெட் 91 பந்துகளில் 107 ரன்களும், ஹாரி புரூக் 72 ரன்களும் அடித்த நிலையில் ஆட்டமிழந்தனர். இறுதி கட்டத்தில் அடில் ரஷித் (36 ரன்கள்) மட்டுமே நிலைத்து விளையாடினார்.

ஆனால் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இங்கிலாந்து 49.2 ஓவர்களில் 309 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 310 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற வலுவான இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா பேட்டிங் செய்ய உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்