ஆகஸ்டு மாதத்துக்கான ஐ.சி.சி.யின் சிறந்த வீரராக பாபர் அசாம் தேர்வு

ஆகஸ்டு மாதத்துக்கான சிறந்த வீராங்கனை விருதுக்கு அயர்லாந்து வேகப்பந்து வீச்சாளர் அர்லின் கெல்லி தேர்வு செய்யப்பட்டார்.

Update: 2023-09-12 22:10 GMT

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது. விருதுக்குரிய பட்டியலில் இருந்து ஐ.சி.சி.யின் அங்கீகாரம் பெற்ற விருது கமிட்டியினர் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் சிறந்த வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கடந்த ஆகஸ்டு மாதத்துக்கான சிறந்த வீரராக பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் சக வீரர் ஷதப் கான், வெஸ்ட்இண்டீஸ் அதிரடி ஆட்டக்காரர் நிகோலஸ் பூரனை பின்னுக்கு தள்ளி இந்த விருதை தனதாக்கி இருக்கிறார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தொடர்ச்சியாக இரண்டு அரைசதமும், ஆசிய கோப்பை போட்டியில் நேபாளத்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 151 ரன்னும் எடுத்ததன் மூலம் அவர் இந்த விருதை தட்டிச் சென்றுள்ளார். இந்த விருதை பாபர் அசாம் பெறுவது இது 3-வது முறையாகும்.

ஆகஸ்டு மாதத்துக்கான சிறந்த வீராங்கனை விருதுக்கு அயர்லாந்து வேகப்பந்து வீச்சாளர் அர்லின் கெல்லி தேர்வு செய்யப்பட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்