சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஓய்வு
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறியது.
சிட்னி,
இறுதி கட்டத்தை எட்டியுள்ள 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்ட ஆஸ்திரேலிய அணி சூப்பர் 8 சுற்றோடு வெளியேறியது. சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவுடன் தோல்வியை தழுவியதால் அந்த அணி வெளியேற நேரிட்டது.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரான டேவிட் வார்னர் அறிவித்துள்ளார். இந்த தொடருக்கு முன்னதாகவே 2024 டி20 உலகக்கோப்பையுடன் சர்வதேச போட்டிகளில் விடை பெறுவேன் என்று அறிவித்திருந்தார்.
தற்போது ஆஸ்திரேலிய அணி இந்த தொடரில் இருந்து வெளியேறிய நிலையில், அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான ஆட்டமே வார்னரின் கடைசி சர்வதேச போட்டியாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வார்னர் ஆஸ்திரேலிய அணிக்காக 112 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8786 ரன்களும், 161 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6932 ரன்களும், 110 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 3277 ரன்களும் குவித்துள்ளார்.
உள்ளூர் தொடர்களில் பங்கேற்பது குறித்து அவர் எந்தவித தகவலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.