ஆசிய கோப்பை கிரிக்கெட்; "எங்கள் ஒவ்வொரு தலைமுறையும் இந்த நாளுக்காக கனவு கண்டது....." -நேபாள பயிற்சியாளர் மான்டி
ஆசிய கோப்பை தொடரில் இந்தியா மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இன்று நடைபெற உள்ளது.;
பல்லகெலெ,
ஆசிய கோப்பை தொடரில் பல்லகெலெவில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் இந்தியா - நேபாளம் அணிகள் மோதுகின்றன.
இந்த ஆட்டம் இரு அணிகளுக்கும் முக்கியமான ஆட்டமாகும். இதில் வெற்றி பெறும் அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும்.
இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான போட்டி குறித்து நேபாள அணியின் பயிற்சியாளர் மாண்டி தேசாய் ,"எங்கள் ஒவ்வொரு தலைமுறையும் இந்த நாளுக்காக கனவு கண்டது....." என கூறியுள்ளார். மேலும் அவர்,
''இதற்கு முந்தைய தலைமுறை வீரர்கள் பெரிய அணிகளுடன் விளையாடுவதை கனவாக கொண்டிருந்தனர். ஆனால் அது அப்போது நடக்கவில்லை. அந்த கனவு இப்போது நனவாக போகிறது. எங்களது அடையாளத்தை நிரூபிக்க இந்த ஆட்டம் உதவும். நாங்கள் தகுதி சுற்று ஆட்டத்தில் விளையாடிய 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றோம். அதேபோல் இந்திய அணிக்கு எதிராகவும் விளையாட முயற்சிப்போம்'' என்று கூறியுள்ளார்.
மேலும், ''கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டார்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற வீரர்களை கண்டு எங்கள் வீரர்கள் வியப்படைகின்றனர். ஆனால் களத்தில் இறங்கிய பின் போட்டி இருக்கும்'' என கூறியுள்ளார்.