ஆஷஸ் 4-வது டெஸ்டில் களம் இறங்குகிறார் ஆண்டர்சன்

3-வது டெஸ்டில் வெளியே உட்கார வைக்கப்பட்ட 40 வயதான ஆண்டர்சன் மீண்டும் அணிக்கு திரும்பியிருக்கிறார்.;

Update:2023-07-18 04:10 IST

Image Courtesy: AFP

மான்செஸ்டர்,

இங்கிலாந்துக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் இரு டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்டுவில் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது.

இதில் களம் இறங்கும் 11 பேர் கொண்ட இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஒரே ஒரு மாற்றமாக ஆலி ராபின்சனுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சேர்க்கப்பட்டுள்ளார். முதல் இரு டெஸ்டில் எதிர்பார்த்தபடி சோபிக்காததால் 3-வது டெஸ்டில் வெளியே உட்கார வைக்கப்பட்ட 40 வயதான ஆண்டர்சன் மீண்டும் அணிக்கு திரும்பியிருக்கிறார். இது அவருக்கு உள்ளூர் மைதானமாகும். ஓல்டு டிராப்போர்டுவில் அவர் 10 டெஸ்டில் விளையாடி 37 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்