2-வது டெஸ்ட்: இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது.

Update: 2024-09-02 00:57 GMT

image courtesy: ICC

லண்டன்,

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று இருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கடந்த செப்டம்பர் 29-ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து 427 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோ ரூட் மற்றும் கஸ் அட்கின்சன் சதமடித்தனர். இதனையடுத்து முதல் இன்னிங்சை விளையாடிய இலங்கை 196 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

பின்னர் 231 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 251 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோ ரூட் 103 ரன்கள் குவித்தார்.

இதனையடுத்து 483 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணியால் வெறும் 292 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதன் மூலம் 190 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இலங்கை அணியில் அதிகபட்சமாக தினேஷ் சண்டிமால் 58 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக கஸ் அட்கின்சன் 5 விக்கெட்டுகளை அள்ளினார். இவரே ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்