2-வது டி20 போட்டி: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

Update: 2024-05-26 00:03 GMT

ஜமைக்கா,

தென் ஆப்பிரிக்க அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக நடைபெற்ற முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்று இருந்தது.

இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டி20 போட்டி நேற்று (இந்திய நேரப்படி இன்று அதிகாலை) நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி அந்த அணி முதலில் களமிறங்கி 20 ஓவர்களில் 207 ரன்களை சேரத்தது.

அணியில் அதிகபட்சமாக ரோஸ்டன் சேஸ் 67 ரன்களும், கேப்டன் பிரண்டன் கிங் 36 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்களே எடுத்தது. குயிண்டன் டி காக் அதிகபட்சமாக 41 ரன்கள் எடுத்தார்.

இதனால் 16 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்றது. அத்துடன் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டி20 போட்டி இன்று (இந்திய நேரப்படி நாளை அதிகாலை) நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.  

Tags:    

மேலும் செய்திகள்