2வது டி20 போட்டி: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது.

Update: 2022-11-20 06:17 GMT

மவுன்ட் மாங்கானு,

நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது.

இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, விராட்கோலி, லோகேஷ் ராகுல், அஸ்வின் உள்பட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், 20 ஓவர் அணிக்கு ஹர்திக் பாண்ட்யாவும், ஒருநாள் போட்டி அணிக்கு ஷிகர் தவானும் கேப்டனாக செயல்பட உள்ளனர்.

முதல் போட்டியை போல் இந்த ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. மவுன்ட் மாங்கானுவில் இன்று மழை பெய்யக்கூடும் என்று அங்குள்ள வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 20 ஓவர் போட்டியில் 20 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 11-ல் இந்தியாவும், 9-ல் நியூசிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. இரு அணியிலும் சிறந்த வீரர்கள் பலர் இருப்பதால் அதிரடியை எதிர்பார்க்கலாம்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்