அஸ்வினுக்கு போட்டி கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம்..! ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை

ராஜஸ்தான் அணியின் அஸ்வினுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-04-13 13:26 GMT

சென்னை,

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி 175 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய சிஎஸ்கே அணி 172 ரன்கள் எடுத்து 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதனால் ராஜஸ்தான் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் சென்னை அணிக்கு எதிரான நேற்றைய போட்டியின்போது கள நடுவர்களின் முடிவை ,வெளிப்படியாக கருத்து தெரிவித்தவிமர்சனம் செய்ததால் ராஜஸ்தான் அணியின் அஸ்வினுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக அவருக்கு போட்டி கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் 

பனிப்பொழிவு காரணமாக நடுவர்கள் பந்தை மாற்றியது தொடர்பாக அஸ்வின் கருத்து தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்