வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இலங்கை அணி 204 ரன்னில் ‘ஆல்-அவுட்’

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இலங்கை அணி 204 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.;

Update:2021-12-01 02:49 IST
காலே,

இலங்கை-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் நடந்து வருகிறது. இதில் முதலில் ஆடிய இலங்கை அணி மழையால் பாதித்த முதல் நாள் ஆட்டம் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 113 ரன்கள் எடுத்து இருந்தது. நேற்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 61.3 ஓவர்களில் 204 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா 73 ரன்கள் சேர்த்தார். 

வெஸ்ட்இண்டீஸ் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் வீராசாமி பெருமாள் 5 விக்கெட்டும், ஜோமில் வாரிகன் 4 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட்இண்டீஸ் அணி 29.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 69 ரன்கள் எடுத்த இருந்த நிலையில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. அத்துடன் நேற்றைய ஆட்டம் கைவிடப்பட்டது. ஜெர்மைன் பிளாக்வுட் 44 ரன்னில் ஆட்டம் இழந்தார். கேப்டன் பிராத்வெய்ட் 22 ரன்னுடனும், கிருமா பொன்னெர் ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இன்று 3-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

மேலும் செய்திகள்