கல்லூரி அணிகளுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி - மார்ஸ் கிரிகோரியஸ் அணி வெற்றி

மார்ஸ் கிரிகோரியஸ் அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் டி.ஜே.எஸ். என்ஜினீயரிங் அணியை வென்றது.

Update: 2023-03-24 21:53 GMT

சென்னை,

திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் மேக்னா கல்லூரி ஆதரவுடன் கல்லூரி அணிகளுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மாகரலில் உள்ள மேக்னா கல்லூரி வளாகத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் மார்ஸ் கிரிகோரியஸ் அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் டி.ஜே.எஸ். என்ஜினீயரிங் அணியை வென்றது.

மற்றொரு ஆட்டத்தில் எல்.ஜி.பொன்னேரி அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வேல்டெக் அணியை தோற்கடித்தது. இதே போல் ஸ்ரீஹெர் அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் நசரேத் அணியை விரட்டியடித்தது. ஸ்ரீஹெர் அணி தரப்பில் சுஜித் குமார் 5 ரன்கள் விட்டுகொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். மற்றொரு ஆட்டத்தில் இந்து கல்லூரி அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் அகர்சன் கல்லூரியை வீழ்த்தியது. இந்து அணியில் அனிருத் 'ஹாட்ரிக்' விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்