'1.25 மில்லியன் ரசிகர்கள்' - சாதனையாக மாறிய உலகக்கோப்பை தொடர்
உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது.
சென்னை,
இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது.
கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி 7 வார காலங்களாக நடைபெற்ற இந்த கிரிக்கெட் திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவு பெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி 6-வது முறையாக 50 ஓவர் உலகக்கோப்பையை கைப்பற்றி அசத்தியது.
இந்த நிலையில் , இந்த உலகக்கோப்பை தொடர் முழுவதையும் 1.25 மில்லியன் ரசிகர்கள் நேரில் கண்டுகளித்ததாக ஐசிசி தெரிவித்துள்ளது.
45 நாட்கள் நடந்த இந்த தொடரை கிட்டத்தட்ட 12,50,307 ரசிகர்கள் மைதானத்துக்கு வந்து நேரில் கண்டுகளித்துள்ளனர். இது உலக சாதனையாக மாறியுள்ளது. கடந்த 2015ல் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடந்த உலகக்கோப்பை தொடரை 1,016 மில்லியன் ரசிகர்கள் நேரில் பார்த்ததே சாதனையாக இருந்தது. தற்போது அதனை இந்தியாவில் நடந்த உலகக்கோப்பை தொடர் முறியடித்துள்ளது.