இன்று நாள் எப்படி..? ராசி பலன்கள்
பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள்.;
22.10.2023 சோபகிருது வருடம் ஐப்பசி மாதம் 5-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை. அஷ்டமி திதி மாலை (5.30)க்கு மேல் நவமி திதி.
உத்ராடம் நட்சத்திரம் மாலை (5.07)க்கு மேல் திருவோணம் நட்சத்திரம்.அமிர்தயோகம். மேல்நோக்குநாள். துர்க்காஷ்டமி. துயரங்கள் விலகத் துர்க்கையை வழிபட வேண்டிய நாள்.
நல்லநேரம் : காலை : 6.15-7.15
மதியம் : 2.00-3.00
ராகுகாலம் : மாலை : 4.30-6.00
எமகண்டம் : மதியம் : 12.00-1.30
குளிகை : மாலை : 3.00- 4.30
வாரசூலை : மேற்கு
சூரிய உதயம் : 6.11
அதிர்ஷ்ட எண்கள் : 4,7,8.
தினப்பலன்
மேஷம்
நிதி நிலை உயர்ந்து நிம்மதி கிடைக்கும் நாள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். வாகன மாற்றம் செய்ய முன்வருவீர்கள். உத்தியோகத்தில் கேட்ட சலுகைககள் கிடைக்கும்.
ரிஷபம்
யோகமான நாள். முன்னேற்றம் கூடும். புத்துணர்ச்சியோடு செயல்படுவீர்கள். ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்படலாம். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். கல்யாண வாய்ப்பு கைகூடும். தொழில் வளர்ச்சியுண்டு.
மிதுனம்
அருகில் உள்ளவர்களை அனுசரித்து செல்ல வேண்டிய நாள். ஏமாற்றத்தை தவிர்க்க எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
கடகம்
நாவன்மையால் நல்ல பெயர் எடுக்கும் நாள். வாய்ப்புகள் வாயில் தேடி வரலாம். தொழிலில் விலகிப்போன பங்குதாரர்கள் மீண்டும் வந்திணையலாம். ஆலய வழிபாடுகளில் ஆர்வம் கூடும்.
சிம்மம்
வசதிகள் பெருகும் நாள். வரன்கள் வாயில் தேடிவரும். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் தோன்றி மறையும். இடமாற்ற சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும்.
கன்னி
நட்புவட்டம் விரிவடையும் நாள். திடீர் பயணங்கள் தித்திக்க வைக்கும். மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. விரயங்கள் கொஞ்சம் கூடுதலாக இருக்கும்.
துலாம்
தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும் நாள். எதிர்பாராத விதத்தில் ஒருவர் உங்களுக்கு உதவி செய்ய முன்வரலாம். எடுத்த முயற்சியில் எளிதில் வெற்றி கிட்டும். உத்தியோக உயர்வு உண்டு.
விருச்சிகம்
நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.
தனுசு
குறை சொல்லியவர்களே பாராட்டும் நாள். தொழில் வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நிலை மாறும். விரக்திகள் விலகும். இடைவிடாது செய்த முயற்சிக்கு இப்பொழுது பலன் கிடைக்கும்.
மகரம்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். கவுரவ பதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலனில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். வெளியுலகத் தொடர்புகள் விரிவடையும்.
கும்பம்
நண்பர்கள் நல்ல தகவல்களை கொண்டு வந்து சேர்க்கும் நாள். வரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் உங்களிடம் ஒப்படைத்த பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம்.
மீனம்
தொட்டது துலங்கும் நாள். வருமானம் போதுமானதாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர். தேக ஆரோக்கியம் சீராகும். நேற்றைய பணி ஒன்று இன்று தொடரலாம்.
பொதுப்பலன்
பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். தனுசு ராசிக்காரர்களுக்கு ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள்.
சந்திராஷ்டமம்: மிதுனம