திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் நாளை தொடங்குகிறது
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் நாளை தொடங்குகிறது.;
திருமலை,
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் நாளை (புதன்கிழமை) தொடங்கி 24-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. அதையொட்டி முதல் நாளான நாளை இரவு உற்சவர்களான ராமச்சந்திரமூர்த்தி, சீதா, லட்சுமணர் மற்றும் ஆஞ்சநேயர் தெப்பத்தேரில் எழுந்தருளி 3 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
2-வது நாள் உற்சவர்கள் சத்தியபாமா, ருக்மணி, ஸ்ரீகிருஷ்ணர் 3 சுற்றுகள் பவனி வருகிறார்கள்.
3-வது நாள் உற்சவர்கள் ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி 3 சுற்றுகள் பவனி வருகிறார்கள்.
4-வது நாள் உற்சவர்கள் ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி 5 சுற்றுகள் பவனி வருகிறார்கள்.
5-வது நாள் உற்சவர்கள் ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி 7 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
தெப்போற்சவத்தால் 20, 21-ந்தேதிகளில் சகஸ்ர தீபலங்கார சேவை, 22, 23, 24-ந்தேதிகளில் ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீபலங்கார சேவை ரத்து செய்யப்படுகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.