பத்ரகாளியம்மன் கோவில் வைகாசி திருவிழா

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பிச்சன்கோட்டகம் வடபாதி பத்ரகாளியம்மன் கோவில் வைகாசி திருவிழா நடந்தது.;

Update:2023-06-04 00:45 IST

திருத்துறைப்பூண்டி;

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பிச்சன்கோட்டகம் வடபாதி பத்ரகாளியம்மன் கோவில் வைகாசி திருவிழா நடந்தது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று சாமிக்கு அபிஷேக ஆராதனைகளும், கஞ்சிவார்த்தல், மாவிளக்கு போடுதல், பால்குடம் எடுத்தல், காவடி எடுத்தல், அர்ச்சனை செய்தல், அன்னதானம் வழங்குதல் நடைபெற்றது. பின்னர் சாமி வீதி உலா காட்சி நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், மற்றும் விழாக்குழுவினர், பிச்சன் கோட்டகம் வடபாதி கிராம மக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்