கூத்தனூர் சரஸ்வதி கோவிலில் சரஸ்வதி பூைஜ, விஜயதசமி வழிபாடு
கூத்தனூர் சரஸ்வதி கோவிலில் சரஸ்வதி பூைஜ, விஜயதசமி வழிபாடு நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
குடவாசல்;
கூத்தனூர் சரஸ்வதி கோவிலில் சரஸ்வதி பூைஜ, விஜயதசமி வழிபாடு நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சரஸ்வதி கோவில்
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள கூத்தனூர் மகா சரஸ்வதி அம்மன் கோவிலில் நேற்று விஜயதசமி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.படைப்பு கடவுளான பிரம்ம தேவரும், சரஸ்வதிதேவியும் சத்தியலோகத்தில் இருந்தபடி அருள் பாலித்து வந்தனர். அப்போது சரஸ்வதி தேவிக்கு எல்லோருக்கும் கல்வியும் ஞானமும் வழங்கும் தானே உயர்ந்தவள் என்ற எண்ணம் ஏற்றபட்டது.சரஸ்வதி தேவியின் எண்ணம் அறிந்த பிரம்மன் படைப்பு தொழில் செய்வதால் தானே பெரியவன் என்று கூறினார். முடிவில் இருவரும் ஒருவரையொருவர் சபித்துக் கொண்டனர். அதன்படி இருவரும் சோழ நாட்டில் குழந்தைகளாக பிறந்தனர்.
நவராத்திரி விழா
இதன்படி சோழவள நாட்டில் பிறந்த சரஸ்வதிக்கு கூத்தனூரில் கோவில் உள்ளது. தமிழகத்தில் சரஸ்வதி தேவிக்கு கோவில் உள்ளது இந்த ஊரில் மட்டும் தான். கூத்தனூர் சரஸ்வதி கோவிலில் நவராத்திரி விழா கடந்த 15-ந் தேதி முதல் நடந்து வருகிறது.நேற்று முன்தினம் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு காலை 6 மணிக்கு சரஸ்வதி தேவிக்கு பால், பன்னீர், தேன், திரவியம், பஞ்சாமிர்தம், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகிவற்றால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் வெண்பட்டு அணிந்து, வெண்தாமரை மற்றும் பல்வேறு மலர்களால் சாமி அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அம்பாளின் சிறப்பு பாத தரிசனம் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பாத தரிசனம் செய்தனர்.
விஜயதசமி விழா
நேற்று காலை 6 மணி அளவில் சிறப்பு ருத்ரா அபிஷேகம் மற்றும் வெண்பட்டு உடுத்தி புஷ்ப அலங்கார ஆராதனைகள் நடைபெற்றது.விழாவில் பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கும் முன்பு அழைத்து வந்து நெல்மணிகளில் அ, ஆ, இ, (வித்யாரம்பம்) ஆகிய எழுத்துக்களை எழுதி கல்விக்கான எதிர்காலத்தை நிலை நிறுத்த சரஸ்வதி தேவியை வணங்கி வழிபட்டனர். விழாவில் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், அரசியல் கட்சி பிரமுகர்கள், வெளி மாநில பக்தர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராஜராஜேஸ்வரன், அறங்காவலர்கள் கணேசன், பிச்சை, ஜெயலட்சுமி, ஆகியோர் செய்திருந்தனர்.