திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கு 1,008 கலசாபிஷேகம்

திருவண்ணாமலைக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தாிசனம் செய்து வருகின்றனர்.

Update: 2024-05-26 16:24 GMT

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தாிசனம் செய்து வருகின்றனர். மேலும் இக்கோவிலுக்கு பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

இந்த நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அண்ணாமலையாருக்கு 1,008 கலசமும், உண்ணாமுலை அம்மனுக்கு 108 கலசமும் ஸ்தாபித்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நாளை மறுதினம் கலசாபிஷேகம் நடைபெறுகிறது.

இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் கோவிலில் பக்தர்களின் வருகை அதிகமாக காணப்பட்டது. கோவிலில் பக்தர்கள் பொது மற்றும் கட்டண தரிசன வழியில் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்