உலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 53.53 கோடியாக உயர்வு..!
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56.28 கோடியாக அதிகரித்துள்ளது.;
வாஷிங்டன்,
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 கோடியே 28 லட்சத்து 46 ஆயிரத்து 707 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 10 லட்சத்து 97 ஆயிரத்து 103 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 53 கோடியே 53 லட்சத்து 72 ஆயிரத்து 893 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 63 லட்சத்து 76 ஆயிரத்து 711 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகள்:-
அமெரிக்கா - பாதிப்பு - 9,06,83,223 உயிரிழப்பு - 10,46,613 குணமடைந்தோர் - 8,61,37,546
இந்தியா - பாதிப்பு - 4,36,72,155 உயிரிழப்பு - 5,25,474 குணமடைந்தோர் - 4,29,96,427
பிரேசில் - பாதிப்பு - 3,30,05,278 உயிரிழப்பு - 6,74,166 குணமடைந்தோர் - 3,13,46,111
பிரான்ஸ் - பாதிப்பு - 3,25,48,947 உயிரிழப்பு - 1,50,305 குணமடைந்தோர் - 3,02,04,294
ஜெர்மனி - பாதிப்பு - 2,91,80,489 உயிரிழப்பு - 1,42,035 குணமடைந்தோர் - 2,73,90,700