இங்கிலாந்து பிரதமர் பதவிக்கு ரிஷி சுனக்குடன் நேருக்கு நேர் மோதப்போவது யார்?
இங்கிலாந்து பிரதமர் பதவிக்கு ரிஷி சுனக்குடன் நேருக்கு நேர் மோதப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.;
லண்டன்,
இங்கிலாந்து நாட்டில் பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமாவால், அடுத்த பிரதமர் பதவி போட்டி சூடு பிடித்துள்ளது.
அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்க கன்சர்வேடிவ் கட்சி எம்.பி.க்களிடையே நடைபெற்ற முதல் இரு கட்ட வாக்கெடுப்புகளில் இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் நிதி மந்திரி ரிஷி சுனக் முன்னிலை பெற்றிருக்கிறார்.
அவருக்கு அடுத்த நிலையில், வர்த்தக மந்திரி பென்னி மோர்டான்ட், வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ், முன்னாள் மந்திரி கெமி படேனோக், டாம் டுகெந்தெட் எம்.பி. ஆகியோர் உள்ளனர். அவர்கள் டெலிவிஷனில் தொடர் விவாதத்தில் ஈடுபட உள்ளனர். இந்த நிலையில் ரிஷி சுனக்குடன் நேருக்கு நேர் களமிறங்குவதற்கான 2-ம் இடத்தை பிடிப்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது.
குறிப்பாக லிஸ் டிரஸ்சுக்கும், பென்னி மோர்டான்டுக்கும் இடையேதான் 2-வது இடத்துக்கு பலத்த போட்டி நிலவுவதாக லண்டனில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.