அமெரிக்கா: புதிதாக பிறந்த குழந்தையை கடலில் வீசிய இந்திய வம்சாவளி பெண் கைது

அமெரிக்காவில் புதிதாக பிறந்த குழந்தையை கடலில் வீசிய இந்திய வம்சாவளி பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2022-12-17 15:27 GMT



புளோரிடா,


அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் வசித்து வருபவர் ஆரியா சிங் (வயது 29). இந்திய வம்சாவளி பெண்ணான இவர், ஆடவர் ஒருவருடன் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். இதில், கடந்த 2018-ம் ஆண்டு மே 30-ந்தேதி ஆரியா சிங்குக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது.

அதனை துணியால் சுற்றி யாருக்கும் தெரியாமல் கடலின் முகப்பு பகுதியில் வீசிவிட்டு சென்றுள்ளார். இதன்பின்பு பாய்ண்டன் பீச்சில் அடுத்த நாள், தீயணைப்பு வீரராக உள்ள ஒருவர் படகு பயணம் செய்ய சென்றபோது, அந்த குழந்தையின் உடலை கண்டுள்ளார்.

இதனை தொடர்ந்து போலீசாருக்கு தகவல் சென்று விசாரணை தீவிரமடைந்தது. இதில், ஆரியா சிங் கைது செய்யப்பட்டார். அவர் போலீசில் நடந்த விசயங்களை ஒப்பு கொண்டுள்ளார் என தி நியூயார்க் போஸ்ட் தெரிவிக்கின்றது.

அந்த குழந்தையின் தந்தையையும் போலீசார் கண்டறிந்து உள்ளனர். அவரிடம் மரபணு சோதனை நடத்தப்பட்டு உள்ளது. அவர் போலீசாரிடம் கூறும்போது, ஒரு பெண்ணுடன் டேட்டிங்கில் ஈடுபட்டு இருந்தேன்.

அவர் என்னிடம், கர்ப்பிணியாக இருக்கிறேன் என்றும் அதனை நான் கவனித்து கொள்வேன் என்றும் கூறினார். அப்படியென்றால், கருக்கலைப்பு செய்து விடுவேன் என அர்த்தம் என அந்த குழந்தையின் தந்தை அதிகாரிகளிடம் கூறியுள்ளார். தொடர்ந்து ஆரியா சிங் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்