அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேறிய ஓரினச்சேர்க்கையாளர் திருமண மசோதா

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஓரினச்சேர்க்கையாளர் திருமண மசோதா நிறைவேறியது

Update: 2022-11-30 19:37 GMT

வாஷிங்டன்,

அமெரிக்காவில் கடந்த 2015-ம் ஆண்டு அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு ஓரின சேர்க்கையாளர் திருமணத்தை சட்டப்பூர்வமாக்கியது.

இந்த சூழலில் கடந்த ஜூன் மாதம் அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு, நாடு முழுவதும் கருக்கலைப்புக்கு தடைவிதித்து சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கியது. இதை தொடர்ந்து, ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கான சட்ட அங்கீகாரத்தையும் சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்யலாம் என்கிற அச்சம் எழுந்தது.

இதனைத் தவிர்க்கும் வகையில் ஓரின சேர்க்கையாளர்களின் திருமண உரிமையை பாதுக்கும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட்சபையில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் செனட்சபையில் இந்த மசோதா ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. அப்போது எதிர்க்கட்சியான குடியரசு கட்சியை சேர்ந்த 12 உறுப்பினர்கள் உள்பட 61 பேர் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். 36 பேர் எதிராக வாக்களித்தனர். இதன் மூலம் செனட் சபையில் அந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது. இதையடுத்து அந்த மசோதா தற்போது பிரதிநிதிகள் சபைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அங்கும் மசோதா நிறைவேறும் பட்சத்தில் அது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். ஜனாதிபதி ஜோ பைடன் அதில் கையெழுத்திட்டதும் அது சட்டமாகும்.

Tags:    

மேலும் செய்திகள்