நெதர்லாந்து நாட்டுக்கான அமெரிக்க தூதராக இந்திய வம்சாவளி பெண் நியமனம் - செனட் சபை ஒப்புதல்

நெதர்லாந்து நாட்டுக்கான அமெரிக்க தூதராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஷெபாலி ரஸ்தான் துக்கால் என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.;

Update:2022-09-16 06:27 IST

கோப்புப்படம்

வாஷிங்டன்,

நெதர்லாந்து நாட்டுக்கான அமெரிக்க தூதராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஷெபாலி ரஸ்தான் துக்கால் (வயது 50) என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான முறையான ஒப்புதலை அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபை வழங்கி விட்டது.

காஷ்மீரி பண்டிட் இனத்தை சேர்ந்த இவர் இந்தியாவில் இன்றயை உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்துவாரில் பிறந்தவர். தனது 2 வயதிலேயே குடும்பத்தினருடன் அமெரிக்காவில் குடியேறியவர் ஆவார். அங்குள்ள மியாமி பல்கலைக்கழகத்தில் பட்டமும், நியூயார்க் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டமும் பெற்றவர். தனது நியமனம் தொடர்பாக கடந்த ஜூலை மாதம் செனட் சபையின் வெளியுறவு குழு விசாரணை நடத்தியபோது இவர், "நான் இந்தியாவில் பிறந்தேன், அமெரிக்காவில் உருவாக்கப்பட்டேன்" என குறிப்பிட்டது நினைவுகூரத்தக்கது.

அதுமட்டுமின்றி, "சின்சினாட்டியில் என்னை வளர்த்தெடுத்தவர் என் அம்மா. என் அப்பா என் இளம் வயதிலேயே பிரிந்து சென்று விட்டார். அது எனது வாழ்க்கையின் திசையை, ஆழமாகவும் நிரந்தரமாகவும் பாதித்தது" எனவும் குறிப்பிட்டார்.

அமெரிக்காவைப் பற்றி அவர் குறிப்பிடுகையில், "இரக்கம், பச்சாதாபம், நேர்மை மற்றும் வியர்வை சமத்துவம் ஆகியவை நம் நாட்டில் ஏதோ ஓன்றைக் குறிக்கின்றது என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. உலகெங்கிலும் உள்ள மக்கள் நம்மை நம்பிக்கை மற்றும் சுதந்திரத்தின் கலங்கரை விளக்கமாகப் பார்க்க இதுவே காரணம். எனது கதை தனித்துவமானது இல்லை என்றாலும் கூட, இது அமெரிக்க உணர்வு மற்றும் அமெரிக்க கனவின் எல்லையற்ற சாத்தியக்கூறுகளை பிரதிபலிக்கிறது" எனவும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்