"பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள அமெரிக்கா தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது" - ஜோ பைடன்

எகிப்தில் நடைபெறும் பருவநிலை மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

Update: 2022-11-11 18:10 GMT

கெய்ரோ,

பருவநிலை மாற்றத்தை சமாளிக்கவும், அதன் தீவிரத்தை குறைக்கவும் ஐ.நா. பருவநிலை மாற்ற பணித்திட்டம் கடந்த 1992-ம் ஆண்டு உருவாக்கப்பட்டு, 1994-ம் ஆண்டில் அது முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தது. இந்த பணித்திட்டத்தில் கையெழுத்திட்டுள்ள 198 நாடுகளும், 1995 முதல் ஆண்டுதோறும் பருவநிலை மாநாட்டை கூட்டி, பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து விவாதித்து வருகின்றன.

அந்த வகையில் ஐ.நா. பருவநிலை மாற்ற பணித்திட்டத்தின் 27-வது மாநாடு எகிப்து நாட்டின் ஷார்ம் எல் ஷேக் நகரில் கடந்த 6-ந்தேதி தொடங்கியது. இந்த மாநாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றி வருகின்றனர்.

அந்த வகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பருவநிலை மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள அமெரிக்கா தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்தார். மேலும் பருவநிலை தொடர்பான நமது இலக்குகளை அடைவதற்கு உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். 

Tags:    

மேலும் செய்திகள்