கெர்சனில் இருந்து ரஷிய ராணுவம் வெளியேற்றம் - உக்ரைன் போரின் முடிவு ஆரம்பமாகிவிட்டது: அதிபர் ஜெலென்ஸ்கி

கெர்சன் நகருக்கு சென்ற உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அங்கு வீரர்களை சந்தித்தார்.

Update: 2022-11-14 14:20 GMT

கீவ்,

உக்ரைன் மீது ரஷிய ராணுவம் கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கியது. இதில் கெர்சன், மரியுபோல் உள்ளிட்ட நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றின.

கெர்சன் நகரை மீட்டு உக்ரைன் படை கடுமையாக சண்டையிட்டு வந்தது. இந்தநிலையில் கெர்சன் நகரில் இருந்து படைகளை வாபஸ் பெறுவதாக ரஷியா அறிவித்தது.இதையடுத்து அங்கிருந்து ரஷிய படைகள் வெளியேறின.

இதையடுத்து கெர்சன் நகருக்கு சென்ற உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அங்கு வீரர்களை சந்தித்தார். மேலும், அங்குள்ள குடியிருப்புகளின் ஜன்னல்கள் வாயிலாக தன்னை நோக்கி கை அசைத்த மக்களிடம் ஜெலென்ஸ்கி கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இதுகுறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும்போது, "கெர்சனில் இருந்து ரஷிய ராணுவம் வெளியேறியது, உக்ரைன் போரின் முடிவு ஆரம்பமாகிவிட்டது என்பதற்கான தொடக்கத்தை குறிக்கிறது.நம் நாட்டின் வலுவான ராணுவம் ரஷியாவால் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களை விடாப்பிடியாக மீட்டெடுத்தது" என்று தெரிவித்தார்.

முன்னதாக ரஷிய ராணுவத்தை நாட்டை விட்டு வெளியேற்றுவதன் மூலம் அனைவரையும் விடுவிப்போம் என்று ஜெலென்ஸ்கி கூறியிருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்