உக்ரைனில் ரஷியா ஏவுகணை தாக்குதல்: 5 குழந்தைகள் உட்பட 11 பேர் பலி
உக்ரைனின் போக்ரோவ்ஸ்க் நகரில் ரஷிய படையினர் தாக்குதல் நடத்தினர்.;
மாஸ்கோ,
உக்ரைன் - ரஷியா இடையேயான போர் இன்று 683-வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. அமைதி பேச்சுவார்த்தைக்கு இரு நாடுகளும் உடன்படாத நிலையில் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்த நிலையில், கிழக்கு உக்ரைனின் போக்ரோவ்ஸ்க் நகரில் ரஷிய படையினர் எஸ்-300 ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தினர். இதில் ஐந்து குழந்தைகள் உட்பட 11 பேர் கொல்லப்பட்டதாக பிராந்திய கவர்னர் தெரிவித்தார்.
60,000 மக்கள்தொகையைக் கொண்டிருந்த போக்ரோவ்ஸ்க் நகரில் ரஷிய படையினர் ஏற்கெனவே ரஷிய படையினர் தாக்குதல் நடத்தியிருந்த நிலையில், தற்போது மீண்டும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.