புலம்பெயர்ந்தவர்கள் சென்ற இரண்டு படகுகள் மூழ்கி விபத்து: 45 பேர் பலியான சோகம்

கிழக்கு ஆப்பிரிக்காவில் புலம்பெயர்ந்தவர்கள் சென்ற இரண்டு படகுகள் மூழ்கி விபத்தில் சிக்கி 45 பேர் பலியாகினர்.

Update: 2024-10-01 21:13 GMT

கோப்புப்படம்

ஜிபூட்டி,

ஜிபூட்டி கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள ஒரு நாடாகும். ஜிபூட்டியின் வட எல்லையில் எரித்திரியாவும் மேற்கு, தெற்கு எல்லைகளில் எதியோப்பியாவும் தென்கிழக்கு எல்லையில் சோமாலியாவும் அமைந்துள்ளன. மீதமுள்ள எல்லை ஏடன் குடாவாலும், செங்கடலாலும் சூழப்பட்டுள்ளது. செங்கடலுக்கு அப்பால் அரேபிய தீபகற்பத்தில் ஏமன் அமைந்துள்ளது.

இந்நிலையில் ஜிபூட்டி கடற்பகுதியில் இரண்டு புலம்பெயர்ந்தோர் படகுகள் மூழ்கியதில் குறைந்தது 45 பேர் உயிரிழந்துள்ளதாக ஐ.நா.வின் இடம்பெயர்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் விபத்துக்குள்ளான படகுகள் 310 பேருடன் ஏமனில் இருந்து புறப்பட்டதாகவும், இந்த சம்பவத்தில் இன்னும் பலரைக் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்