ரஷியாவில் இந்திய கடைகளை திறப்பது குறித்து பேச்சுவார்த்தை - அதிபர் புதின்

5 நாடுகள் பங்கேற்கும் 14-வது பிரிக்ஸ் மாநாடு இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

Update: 2022-06-23 06:35 GMT

மாஸ்கோ,

5 நாடுகள் பங்கேற்கும் 14-வது பிரிக்ஸ் மாநாடு இன்றும் நாளையும் நடைபெறுகிறது. அதில் சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பங்கேற்கிறார். மேலும், பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ, தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

இந்த நிலையில், இது தொடர்பாக விளாடிமிர் புதின் பேசுகையில், பிரிக்ஸ் நாடுகளில் ரஷியாவின் இருப்பு அதிகரித்து வருகிறது. ரஷிய கூட்டமைப்பு மற்றும் பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் 38 சதவீதம் அதிகரித்துள்ளது.

ரஷியாவில் இந்திய கடைகளை திறப்பது குறித்தும், ரஷிய சந்தையில் சீன கார்கள், உபகரணங்கள் மற்றும் ஹார்டுவேர் பொருட்களின் பங்கை அதிகரிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. ரஷியாவை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்துகின்றன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்