அடுத்த மாதத்தில் இருந்து இலங்கையில் பெட்ரோல், டீசல் வாங்க புதியமுறை அறிமுகம்

அடுத்த மாதத்தில் இருந்து இலங்கையில் பெட்ரோல், டீசல் வாங்க புதியமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Update: 2022-06-12 20:10 GMT

கொழும்பு,

இலங்கையில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நீடித்து வருகிறது. பெட்ரோல் விற்பனை நிலையங்களில் நீண்ட வரிசை காணப்படுகிறது.

இந்தநிலையில், இலங்கை எரிசக்தி மற்றும் மின்துறை மந்திரி காஞ்சனா விஜேசேகரா கூறியதாவது:-

சிலோன் பெட்ரோலியம் கழகம், அன்னிய செலாவணி பற்றாக்குறை காரணமாக, ஒரு வாரத்துக்கு தேவையான பெட்ரோல், டீசலை மட்டுமே இறக்குமதி செய்கிறது. ஆனால் சிலர் தங்கள் எந்திரங்கள் மற்றும் ஜெனரேட்டர்களுக்கு ஒரு மாதத்துக்கு தேவையான எரிபொருளை வாங்கி வைத்துக் கொள்கிறார்கள்.

எனவே, எரிபொருள் வாங்க ஒதுக்கீடு முறையை கொண்டு வருவது அவசியம் ஆகிறது. அனைத்து வாகன உரிமையாளர்களும், தங்களுக்கு அருகில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

ஜூலை மாதம் முதலாவது வாரத்தில் இருந்து, ஒவ்வொரு வாகனத்துக்கும் ஒரு வாரத்துக்கு எவ்வளவு தேவையோ அந்த எரிபொருள் உத்தரவாதமாக வழங்கப்படும். எரிபொருள் தட்டுப்பாடு நீங்கும்வரை இந்த முறை தொடரும் என்று அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்