தென் கொரியாவில் நடுவானில் விமானத்தின் கதவை திறந்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

தென் கொரியாவில் நடுவானில் விமானத்தின் கதவை திறந்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2023-05-28 19:31 GMT

சியோல்,

தென் கொரியாவின் தெற்கு பகுதியில் உள்ள ஜெஜூ தீவில் இருந்து டேகு பகுதிக்கு விமானம் ஒன்று கடந்த 2 நாட்களுக்கு முன் புறப்பட்டது. இந்த விமானத்தில் 194 விளையாட்டு வீரர்கள் உள்பட சுமார் 200 பேர் பயணம் செய்தனர். டேகு விமான நிலையத்தில் தரை இறங்க முற்பட்டபோது அந்த விமானத்தின் கதவு திடீரென திறந்தது. இதனால் விமானத்தில் இருந்த அனைவருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

எனவே விமானம் தரை இறங்கியவுடன் அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையே விமானத்தின் கதவை திறந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர்.

இதில் அந்த வாலிபர் தனக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதால் உடனடியாக இறங்க வேண்டும் என்பதற்காக கதவை திறந்ததாக கூறினார். எனினும் விமான பாதுகாப்பு சட்டத்தை மீறியதற்காக அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என அந்த நாட்டின் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்