தென்சீன கடல் பகுதியில் சீன ஆக்கிரமிப்பு அகற்றம்: பிலிப்பைன்ஸ் கடலோர போலீசார் அதிரடி

தென்சீன கடல் பகுதியில் சீன ஆக்கிரமிப்புகளை பிலிப்பைன்ஸ் கடலோர போலீசார் அகற்றினர்.

Update: 2023-09-26 19:33 GMT

கோப்புப்படம்

மணிலா,

பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதியாக தென் சீனக்கடல் உள்ளது. தெற்கு ஆசிய நாடுகளின் போக்குவரத்துக்கு முக்கியமான இந்த பகுதியை சீனா உரிமை கொண்டாடி வருகிறது. அதேசமயம் தைவான், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளும் இதற்கு உரிமை கோருகின்றன. இந்தநிலையில் அங்கு சுமார் 100 அடி நீளத்துக்கு மிதக்கும் தடை ஒன்றை சீனா நிறுவியது. இது சர்வதேச சட்டம் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் இறையாண்மையை மீறுவதாக பிலிப்பைன்ஸ் கண்டனம் தெரிவித்தது.

இந்தநிலையில் சர்ச்சைக்குரிய தென்சீன கடல் பகுதிக்குள் நுழைய முயன்ற பிலிப்பைன்ஸ் நாட்டின் மீன்பிடி படகுகளை சீனா தடுத்து நிறுத்தியது. எனவே சீனாவின் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் உத்தரவிட்டார். இதனால் பிலிப்பைன்ஸ் கடலோர போலீசார் சீனாவின் மிதக்கும் தடைகளை அகற்றினர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்