ரஷியாவின் ஆக்கிரமிப்பில் உள்ள அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரிக்கை

ஜபோர்ஜிய அணுமின் நிலையத்தில் கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2023-07-02 18:26 GMT

கீவ்,

உக்ரைன் மீது ரஷிய ராணுவம் கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி தாக்குதல் நடத்த தொடங்கியது. ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வரும் இந்த தாக்குதலில் உக்ரைனின் பல பகுதிகளை ரஷிய ராணுவம் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. அதே சமயம் இந்த தாக்குதல்களுக்கு மேற்கத்திய நாடுகளின் உதவியோடு உக்ரைன் பாதுகாப்ப்புப்படை தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த நிலையில் ரஷியாவின் ஆக்கிரமிப்பில் உள்ள உக்ரைனின் ஜபோர்ஜிய அணுமின் நிலையத்தில் கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் அங்கு வெடி விபத்தை நிகழ்த்த ரஷியா தொழில்நுட்ப ரீதியில் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த விவகாரத்தை சர்வதேச நாடுகள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்த அவர், ரஷியாவின் அரசு அணுசக்தி நிறுவனமான 'ரோசாட்டாம்' மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.


Full View


Tags:    

மேலும் செய்திகள்