ஓரினச்சேர்க்கை திருமணம் குறித்து ரஷிய அதிபர் புதின் பரபரப்பு கருத்து

மேற்கத்திய நாடுகளில் ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதற்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.;

Update:2023-02-22 12:23 IST

மாஸ்கோ,

மேற்கத்திய நாடுகளில் ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதற்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ரஷிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய புதின், உக்ரைன் போருக்கு மட்டுமின்றி கலாச்சாரம் தொடர்பான விஷயங்களிலும் மேற்கத்திய நாடுகளை கடுமையாக விமர்சனம் செய்தார். மேற்கத்திய நாடுகளில் ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த புதின், மேற்கத்திய நாடுகள் குடும்ப அமைப்பு, கலாச்சார-வரலாற்று அடையாளத்தை அழிப்பதாகவும், குழந்தைகள் விவகாரத்தில் பல்வேறு வக்கிரங்கள் அரங்கேற்றப்படுவதாகவும் விமர்சித்தார்.

மேலும் குடும்பம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவு மட்டுமே என்றும் அவர் குறிப்பிட்டார். அதுபோல் பிரார்த்திக்கும் கடவுளுக்கு ஆண்பால், பெண்பால் பெயரின்றி பாலின-நடுநிலை பிரதிபெயர்களை அறிமுகப்படுத்த பரிசீலித்து வருவதாக இங்கிலாந்து தேவாலயம் அறிவித்திருந்ததையும் புதின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.Full View

Tags:    

மேலும் செய்திகள்