ரஷிய இராணுவத்திற்கு மனிதாபிமான உதவியாக மூன்று டன் மருந்து பொருட்களை அனுப்பி வைத்த ரஷிய-இந்திய நட்புறவு சங்கம்!

ரஷியா-இந்தியா நட்புறவு சங்கமான ‘திஷா’, மூன்று டன் அளவு பொருட்களை மனிதாபிமான உதவியாக ரஷியாவுக்கு அனுப்பியுள்ளது.

Update: 2022-05-29 12:27 GMT

மாஸ்கோ,


ரஷியா-இந்தியா இருநாட்டு நட்புறவு சங்கமான 'திஷா', மூன்று டன் அளவு பொருட்களை மனிதாபிமான உதவியாக ரஷியாவுக்கு அனுப்பியுள்ளது.


மனிதாபிமான உதவியாக மருந்துகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள், குர்ஸ்கில் உள்ள ரஷிய ஆயுதப்படைகளின் மருத்துவ நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்தியாவில் உள்ள ரஷிய தூதரகம் இந்த தகவலை தனது டெலிகிராம் சேனலில் தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களில், ரஷிய தூதரகம் தெரிவித்துள்ளதாவது, "ரஷிய-இந்திய நட்புறவு சங்கம் திஷா மனிதாபிமான உதவியின் அடுத்த தொகுப்பை ஏற்பாடு செய்தது.

அதில் இந்திய மருந்து நிறுவனமான பன்பியோ பார்ம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மருந்துகள் அடங்கும். குர்ஸ்கில் உள்ள ரஷிய ஆயுதப் படைகளின் மருத்துவ நிலையங்களில் ஒன்றிற்கு இந்த தொகுப்பு கொண்டு செல்லப்பட்டது" என ரஷிய தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்திய-ரஷிய உறவுகளில் அரசியல், பாதுகாப்பு, ராணுவம், வர்த்தகம் மற்றும் பொருளாதாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட இருதரப்பு உறவுகளின் கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் மேம்பட்ட அளவிலான ஒத்துழைப்பு உள்ளது.

ரஷியா - உக்ரைன் மோதல் நடந்து வரும் சூழலில், பலதரப்பு கொள்கையின்படி இந்தியாவின் சமநிலையான நிலைப்பாட்டை மேற்கத்திய நாடுகள் விமர்சித்து வருகின்றன.

மறுபுறம், தற்போதைய நெருக்கடியில் இந்தியாவின் நிலைப்பாட்டைப் புரிந்துகொள்வதாக ரஷ்யா வெளிப்படுத்தியுள்ளது.ரஷியா-உக்ரைன் மோதல் தொடர்பாக இந்தியா "மிகவும் சமநிலையான நிலைப்பாட்டை" எடுத்து வருவதாக இந்தியாவுக்கான ரஷிய தூதர் டெனிஸ் அலிபோவ் சமீபத்தில் தெரிவித்தார்.

இந்த நிலையில், இந்த உதவி, இரு நாட்டு மக்களையும் இணைக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்