உக்ரைனில் ரஷியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட கெர்சனில் பிறந்த குழந்தைகளுக்கு ரஷிய குடியுரிமை!

உக்ரைனில் உள்ள கெர்சனில் பிறந்த குழந்தைகளுக்கு ரஷிய தேசத்து குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

Update: 2022-06-16 10:55 GMT

மாஸ்கோ,

ரஷியா-உக்ரைன் போர் தொடங்கி 113 நாட்கள் கடந்துவிட்டன. இப்போதைய சூழலில், உக்ரைனின் கிழக்கு டான்பாஸ் பகுதியில் உள்ள சீவிரோடோனெட்ஸ்க் நகரம், ரஷியாவின் தாக்குதலின் மையமாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ரஷியா-உக்ரைன் போர் தொடங்கிய பிப்ரவரி 24ம் தேதிக்கு பிறகு, உக்ரைனில் உள்ள கெர்சனில் பிறந்த குழந்தைகளுக்கு ரஷிய தேசத்து குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

உக்ரைனின் கெர்சன் ரஷியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாக உள்ளது. கிரிமியன் தீபகற்பத்தின் வடக்கே அமைந்துள்ள கெர்சன், ரஷிய கட்டுப்பாட்டின் கீழ் வந்த உக்ரைனின் முதல் பிராந்தியம் ஆகும்.

இந்நிலையில் அங்கு பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும், தற்போது அங்கு வசிக்கும் அனைத்து ஆதரவற்றவர்களுக்கும் ரஷிய குடியுரிமை வழங்கப்படுகிறது.கெர்சனில் வசிக்கும் 23 குடியிருப்பாளர்கள் ரஷிய பாஸ்போர்ட்டைப் பெற்றுள்ளனர் என்று ரஷிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

நடந்துகொண்டிருக்கும் போரில், இரு நாட்டினரும் தங்கள் தாக்குதல்கள் மற்றும் அழிவுகள் பற்றிய விவரங்களைத் தொடர்ந்து பகிர்ந்து கொள்கிறார்கள். அதன் மூலம், பொதுமக்களின் கருத்தை தங்களுக்குச் சாதகமாக மாற்றும் முயற்சியில் உள்ளனர்.

ரஷிய ஆதரவு பிரிவினைவாதிகள் ஆதரவு பெற்ற, லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் பகுதிகளில் ரஷிய படைகளின் தாக்குதல் முடுக்கிவிடப்பட்டுள்ளது. சீவிரோடோனெட்ஸ்கில் இன்றும் கடுமையான சண்டை தொடர்கிறது. 

Tags:    

மேலும் செய்திகள்