"அணு ஆயுத சோதனை; வடகொரியா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும்" - அமெரிக்கா வலியுறுத்தல்

ஆபத்தான அணு ஆயுத சோதனைக்கு எதிராக தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படும் என அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-14 07:30 GMT

வாஷிங்டன்,

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் மற்றும் தென் கொரியாவின் வெளியுறவுத்துறை மந்திரி பார்க் ஜின் ஆகியோர் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய ஆண்டனி பிளிங்கன், சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி 7-வது அணு ஆயுத சோதனைக்கு வட கொரியா தயாராகி வருவதாக அமெரிக்க ராணுவம் எச்சரித்துள்ளதாகவும், இந்த விவகாரத்தில் வட கொரியா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

கொரிய தீபகற்பத்திலும், உலகிலும் அமைதியை நிலைநாட்டுவதே தங்கள் இலக்கு என்று தெரிவித்த அவர், ஆபத்தான அணு ஆயுத சோதனைக்கு எதிராக தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதே போல், ஜப்பான் மற்றும் தென் கொரியாவும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்