ராணியின் மறைவை அடுத்து இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ஒலித்த புதிய தேசியகீதம்
ராணியின் எலிசபெத் மறைவை அடுத்து தேசிய கீதத்தில், மன்னர் வாழ்க என சொற்கள் மாற்றப்பட்டு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இன்று பாடப்பட்டது.;
லண்டன்,
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் மன்னர் சார்லஸ் உரையாற்றிய பின், உறுப்பினர்கள் மன்னர் வாழ்க என, தேசிய கீதத்தை பாடினர். இங்கிலாந்து தேசிய கீதத்தில் ராணி வாழ்க என பாடப்பட்டு வந்தது.
தற்போது எலிசபெத் ராணி மறைந்ததையடுத்து, மன்னர் சார்லஸ் பொறுப்பேற்றார். இதனையடுத்து தேசிய கீதத்தில், மன்னர் வாழ்க என சொற்கள் மாற்றப்பட்டன. இந்நிலையில், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் மன்னர் சார்லஸ் உரையாற்றிய பின் இரு அவைகளின் உறுப்பினர்களும், தேசிய கீதத்தை பாடினர்.