பாகிஸ்தான் வெள்ளம்: 530 குழந்தைகள் உட்பட 1500க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல்!
பாகிஸ்தானில் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில், 30 ஆண்டு சராசரி மழை அளவை விட 190 சதவீதம் அதிகமாக பெய்தது.;
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானின் வரலாறு காணாத வெள்ளம், தெற்காசிய தேசத்தின் பெரும் பகுதிகளை மூழ்கடித்துள்ளது.
பாகிஸ்தானில் கடந்த மாதங்களில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்தது. இதனால் அந்த நாட்டின் பெரும்பாலான நகரங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன.பல குடும்பத்தினர் கனமழை மற்றும் வெள்ளத்தில் வீடுகளை இழந்து உள்ளனர்.
பாகிஸ்தானில் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் 391 மிமீ (15.4 அங்குலம்) அளவுக்கு மழை பதிவாகியுள்ளது, அல்லது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கனமழை வெள்ளத்தால் ஏராளாமானோர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 1500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.இன்று வரை உயிரிழந்த 1486 பேரில் 530 பேர் குழந்தைகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் வெள்ளம் காரணமாக சுமார் 3 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 12,000க்கும் அதிகமானோர் வெள்ளத்தில் சிக்சி காயமடைந்துள்ளனர்.