செவ்வாய் கிரகத்தை ஆய்வுசெய்துவரும் ரோவரின் சக்கரத்தில் 1 வருடமாக சிக்கியிருந்த கல் விடுபட்டது.!
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக நாசா கடந்த 2020 ஆம் ஆண்டு பெர்சவரன்ஸ் ரோவரை அனுப்பியது.
வாஷிங்டன்,
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கடந்த 2020 ஆம் ஆண்டு பெர்சவரன்ஸ் ரோவரை அனுப்பியது.
கடந்த வருடம் பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய பெர்சவரன்ஸ் ரோவர், செவ்வாய் கிரகத்தை படம் பிடித்து பூமிக்கு அனுப்பியது. மேலும், மண் துகள்கள் உள்ளிட்ட மாதிரிகளையும் பெர்சவரன்ஸ் ரேவர் சேகரித்து வருகிறது.
இந்த ரோவர் செவ்வாயின் மேற்பரப்பில் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ரோவரின் சக்கரத்தின் ஒரு பகுதியில் சிறிய கல் ஒன்று சிக்கிக்கொண்டது. எனினும், இந்த கல்லினால் ரோவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
ரோவரின் முன்சக்கரத்தில் சிக்கியிருந்த அந்த கல், கடந்த பிப்ரவரி 2022 ல் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து ஒரு வருடமாக சக்கரத்தினுள்ளேயே சிக்கியிருந்த அந்த கல்லையும் தன்னுள் கொண்டு, பாலைவனங்கள் மற்றும் மலை பகுதிகளை சுமார் 10 கிலோமீட்டர் தூரம் வரை ரோவர் கடந்து சென்றது.
இந்த நிலையில், தற்போது ரோவரின் சக்கரத்தில் சிக்கியிருந்த கல்லை கானவில்லை என நாசா தெரிவித்து உள்ளது. ரோவரின் சூப்பர் கேம் கருவியின் பொறுப்பாளரான க்வெனேல் காரவாகா, சமீபத்திய புகைப்படத்தில், ரோவரில் சிக்கியிருந்த பாறை கானாமல் போனதாக தெரிவித்தார்.