மியான்மரில் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி: 30-க்கும் மேற்பட்டோர் மாயம்

மியான்மரில் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலியானார்கள். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர்.;

Update:2023-08-15 03:30 IST

கோப்புப்படம்

யாங்கூன்,

மியான்மர் நாட்டில் ஜேட் என்ற கனிமத்தை பிரித்தெடுப்பது பரவலாக மேற்கொள்ளப்படும் தொழில் ஆகும். அதன்படி கச்சின் மாகாணத்தில் உள்ள சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த சுரங்கம் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் இடிபாடுகளில் சிக்கி 2 பேர் பலியானார்கள். 8 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவில் சிக்கி 30-க்கும் மேற்பட்டோர் மாயமானதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்