கிரேக்க கடலில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து - 79 பேர் பரிதாப பலி

கிரேக்க கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் சிக்கி 79 அகதிகள் பரிதாபமாக பலியாகினர்.

Update: 2023-06-14 20:46 GMT

கோப்புப்படம்

கலாமட்டா,

இத்தாலிக்கு அகதிகளை ஏற்றிச் சென்ற மீன்பிடிக் கப்பல் கவிழ்ந்து மூழ்கியது. மத்தியதரைக் கடலில் ஏற்பட்ட மிகக் பயங்கரமான இந்த விபத்தில் சிக்கி குறைந்தது 79 உடல்கள் கிரேக்க அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நேற்று அதிகாலையில் கப்பல் கவிழ்ந்ததை அடுத்து, கிரீசின் கடலோரக் காவல்படை - கடற்படை மற்றும் வணிகக் கப்பல்கள் மற்றும் விமானங்களுடன் பரந்த தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையைத் தொடங்கியது. இதுவரை 104 பேர் காப்பாற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பெலோபொன்னீஸ் தீபகற்பத்தின் தென்மேற்கில் உள்ள துறைமுகமான பிலோஸின் தெற்கே உள்ள பகுதியில் இரவு முழுவதும் தேடுதல் பணி தொடர்ந்தது. 400 பேர் வரை படகில் இருந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன என்று ஐ.நாவின் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு டுவீட் செய்துள்ள நிலையில், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கப்பலின் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்ததாக உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்தனர். முன்னதாக நேற்று மதியம் கிரேக்க நிலப்பகுதிக்கு அருகில் கப்பல் பயணிப்பதாக இத்தாலிய அதிகாரிகளால் ஏதென்சுக்கு தகவல் கிடைத்தது.

Tags:    

மேலும் செய்திகள்